பட்டாசு விற்கும் அங்காடியில் தீ: ஒருவர் பலத்த காயம்

சபாக் பெர்ணம், ஏப்ரல்.02-

இன்று அதிகாலை இங்குள்ள கம்போங் பத்து 39-ல் பட்டாசு விற்கும் அங்காடி தீப்பிடித்ததில் ஒருவர் பலத்த காயமடைந்தார், மேலும் மூவர் இலேசாகக் காயமடைந்தனர். தீச் சம்பவம் குறித்து, அதிகாலை 1.08 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு – மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு தீ அணைக்கப்பட்டது. 20 வயதுக்கு உட்பட்ட உள்ளூர் இளைஞர்கள் நான்கு பேர் காயமடைந்தனர். அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS