லைசன்ஸ் இன்றி வணிகம் செய்த அந்நிய நாட்டவர்கள் – டிபிகேஎல் நடவடிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல்.02-

கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், முறையான லைசன்ஸ் இன்றி வணிகம் செய்து வந்த பதினொரு அந்நிய நாட்டு வியாபாரிகளின் விற்பனைப் பொருட்களைச் சீல் வைத்தது. தலைநகரில் மஸ்ஜிட் ஜாமேக், கேஎல்சிசி வளாகம், பவிலியன் புக்கிட் பிந்தாங் விற்பனை மையம் உள்ளிட்ட சில முக்கியப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வியாபாரிகள் ஆடைகள், உணவுப் பொருட்கள், சுவை பானங்கள் ஆகியவற்றை அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. சீல் வைக்கப்பட்ட பொருட்கள் யாவும் மேல் விசாரணைக்காக டிபிகேஎல்லின் கிடங்கொன்றுக்குக் கொண்டுச் செல்லப்பட்டன. வணிகர்கள் குறிப்பாக அந்நிய நாட்டு வியாபாரிகள் லைசன்ஸ் இன்றி வர்த்தகம் செய்வதைத் தடுக்க குடிநுழைவுத் துறையின் உதவியுடன் தலைநகரில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக டிபிகேஎல் தெரிவித்தது.

WATCH OUR LATEST NEWS