அதிகாரத்துவத் தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாலிங், ஏப்ரல்.02-

கெடா, பாலிங், தாமான் டேசா பீடாரா வீடமைப்புப் பகுதியில் இருந்து ரோட்வேலர் ரக நாய்கள் வெளியேற்றப்படுவதோடு அதிகாரத்துவத் தரப்பு கடும் நடவடிக்கை எடுக்கும் என அங்குள்ள குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர். நேற்று வீடொன்றின் கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள் கடித்துத் குதறியதில் ஐவர் கடும் காயமுற்றனர். அவ்வாறான சம்பவம் நிகழ்வது இது முதல் முறை அல்ல. ஈராண்டுகளுக்கு முன் அதே நாய்கள் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியதாக அப்பகுதியின் ருக்குன் தெதாங்கா தலைவர் அப்துலாஸிம் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

அப்பகுதியில் குடியிருப்போரின் பாதுகாப்பு மிக முக்கியம். ரோட்வேலர் ரக நாய்களை வீடமைப்புப் பகுதிகளில் வளர்க்க அனுமதி வழங்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தினார். நேற்று ஐவரைக் கடித்துக் குதறிய நாய்களை அதன் உரிமையாளர் கூண்டில் மீண்டும் அடைத்து விட்டார். அந்நாய்களை கூலிம் கால்நடைச் சேவைத்துறையிடம் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS