உலு சிலாங்கூர், ஏப்ரல்.02-
சிலாங்கூர், பத்தாங் காலியில் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜாலான் உலு யாம் பாஹாரு- பத்துகேவ்ஸ் சாலை போக்குவரத்துக்கு இன்று மீண்டும் திறந்து விடப்பட்டது. சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்து இன்று பிற்பகல் ஒரு மணி வாக்கில் அச்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக உலு சிலாங்கூர் பொதுப்பணித் துறை தெரிவித்தது.
அச்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் காணப்படும் உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் ஆலோசனை கூறப்படுகிறது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை மதிப்பதாகவும் இடையூறுகளுக்கு வருந்துவதாகவும் அது குறிப்பிட்டது.