சுயேட்சையான, வெளிப்படையான விசாரணை அவசியம் – சிலாங்கூர் பெரிக்காதான் நேஷனல்

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சுயேட்சையான அதே சமயம் வெளிப்படையான விசாரணை அவசியம். சிலாங்கூர் பெரிக்காதான் நேஷனல் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி அவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அத்தகையச் சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிச் செய்ய தடுப்பு நடவடிக்கைகளும் முக்கியம் என அவர் கேட்டுக் கொண்டார்.

அவ்விஷயங்களை முழுமையாக விவாதிக்க சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதோடு மாநில அரசாங்கம் எரிவாயு குழாய் போன்ற ஆபத்தான உள்கட்டமைப்பு வசதிகள் சம்பந்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை அங்கீகரிக்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அஸ்மின் அலி வலியுறுத்தினார். மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டும். அதே வேளை வெடிப்புச் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு பெட்ரோனாஸ் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என்றாரவர்.

WATCH OUR LATEST NEWS