புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு: ஜேபிஎன் முகப்பு திறக்கப்படும்

கோலாலம்பூர், ஏப்ரல்.02-

புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மஸ்ஜிட் புத்ரா ஹைட்ஸ் தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தேசிய பதிவுத் துறையின் முகப்பு திறக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் சுய ஆவணங்களை நிர்வகிக்க உதவ அம்முகப்பு அமைக்கப்படும் என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணையமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் நொராய்னி அஹ்மாட் தெரிவித்தார்.

அவ்வெடிப்புச் சம்பவத்தில் சிலரது சுய ஆவணங்கள் சேதமடைந்து விட்டன. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு உடனடியாக வெளியேறிய சிலர்அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களைப் பறிகொடுத்துள்ளனர். எனவே அவர்களுக்கு உதவ அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார். அதே வேளை சம்பவ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருப்போருக்கு மனோ ரீதியிலான ஆதரவு வழங்க தேசிய நல அறவாரியத்தின் உதவியும் நாடப்பட்டுள்ளதாக நொராய்னி கூறினார். மஸ்ஜிட் புத்ரா ஹைட்ஸில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 323 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS