சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாந்தநேய அடிப்படையில் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் AKF எனப்படும் aturan kerja fleksibel நெகிழ்வான வேலை நேர ஏற்பாடுகளையும் வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு மனிதவள அமைச்சு முதலாளிகளை வலியுறுத்துகிறது. உடமைகள் சேதம் தொடர்பான பாதிக்கப்பட்டவர்களின் சிரமத்தை எளிதாக்குவதற்காக இதனைக் கருத்தில் கொள்ளுமாறு அமைச்சு முதலாளிகளைக் கேட்டுக் கொண்டது. மீட்பு காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாத பாதிக்கப்பட்டத் தொழிலாளர்கள், 1955 ஆம் ஆண்டு வேலைச் சட்டத்தின் பிரிவு 60P இன் கீழ் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வான வேலை நேர ஏற்பாடுகளுக்கு விண்ணப்பிக்க அமைச்சு அவர்களை ஊக்குவிக்கிறது. அவர்கள் அனுபவிக்கும் சிரம நேரத்தைக் கணக்கில் கொண்டு, பொருத்தமான காலத்திற்கு தொடர்புடைய ஊழியர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்குமாறு அமைச்சு முதலாளிகளைக் கேட்டுக் கொள்கிறது.