சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒரு மாதத்திற்கு 50 கார்கள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ங் ஸீ ஹான் தெரிவித்தார். 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை சென்றதாகக் கூறப்படும் அந்தக் கோரச் சம்பவத்தில் கார்கள் சேதமடைந்ததால் சிரமத்தை அனுபவிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
இன்று காலை, Chery Malaysia ஒரு மாதத்திற்கு தேவைப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 கார்களை வழங்க ஒப்புக்கொண்டது. அது “யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கே முதலில் வழங்கப்படும்” என்ற அடிப்படையில் வழங்கப்படும். மேலும் தனது அலுவலகம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் செய்யலாம் என்று அவர் கூறினார்.
உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு அது கிடைக்கும் வகையில், தேர்வு செயல்முறைக்குப் பிறகு வாகனங்கள் விரைவில் வழங்கப்படும் என்று ங் மேலும் கூறினார். இந்த முயற்சியின் மொத்த மதிப்பு 5 இலட்சம் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.