சுபாங் ஜெயா, ஏப்ரல்.02
சிலாங்கூர் இளவரசர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுஃடின் இட்ரிஸ் ஷா, இன்று சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் தற்காலிக துயர் துடைப்பு மையத்திற்கு வருகை தந்தார். பிற்பகல் 3.10 மணிக்கு வருகை தந்த அவருக்கு கிராமப்புற மேம்பாடு, ஒற்றுமை, பயனீட்டாளர் நிர்வாக ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயிலும் சிலாங்கூர் பேரிடர் மேலாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் நாஜ்வான் ஹாலிமியும் உடன் வந்தனர். பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் அடங்கிய 100 உதவிப் பெட்டிகளை வழங்கினார். முன்னதாக தெங்கு அமீர் சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.