நாட்டின் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை

கூச்சிங், ஏப்ரல்.02

நேற்று சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்ததைத் தொடர்ந்து நாட்டின் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை. இந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு விநியோகம் குறைந்திருந்தாலும், மின்சார விநியோகம் இன்னும் நிலையாக உள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ பஃடில்லா யூசோப் கூறினார். தற்போதுள்ள குழாய்கள் மூடப்பட்டவுடன், பெட்ரோனாஸ் எரிவாயு விநியோகத்தைப் பெறுவதற்கான மாற்று வழிகளைத் தேடுகிறது என்று எரிசக்தி, நீர் மாற்ற அமைச்சருமான அவர் கூறினார். குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் மின்சாரம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டீசல் அல்லது நிலக்கரி எரிபொருளைக் கொண்டு இயங்கும் பழைய மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவது போன்ற அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் கேபிள்கள் குறித்து பாஃடில்லா கூறுகையில், இதுவரை அவை பாதிக்கப்படவில்லை, ஆனால் பெட்ரோனாஸுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதியில் மின் கேபிள்களின் ஒருங்கிணைந்த தணிக்கையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அனைத்து உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த டிஎன்பி கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள கேபிள்கள் தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காப்புறுதி மூலமாகவோ அல்லது முழு விசாரணைக்குப் பிறகோ உதவிக்கான வடிவம் பெட்ரோனாஸால் இறுதிச் செய்யப்படும் என்றார்.

WATCH OUR LATEST NEWS