கோலாலம்பூர், ஏப்ரல்.02-
அடுத்த ஒரு வாரத்திற்கான பெட்ரோல் விலையில் ரோன் 97 லிட்டருக்கு 5 சென் உயர்வை எட்டியுள்ளது. பெட்ரோல் ரோன் 95, டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையில், பெட்ரோல் ரோன் 95இன் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசாகவும், டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசாகவும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சபா, சரவாக்கில் டீசல் லிட்டருக்கு 3 ரிங்கிட் 43 காசாகவும் நிதி அமைச்சு நிலை நிறுத்தியுள்ளது.
பெட்ரேல் ரோன் 97 இன் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 33 காசாக உயர்வு கண்டுள்ளது.