காற்று மாசுபாடு எதுவும் கண்டறியப்படவில்லை

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02

நேற்று புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து அருகிலுள்ள ஏழு காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள், காற்று மாசுபாடு எதையும் கண்டறியவில்லை. பாதிக்கப்பட்ட அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியான கம்போங் கோலா சுங்கை பாரு உட்பட பல இடங்களில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு நடத்தியது.

தற்போதைய காற்று தர நிலையை கண்காணிக்க அருகிலுள்ள இடத்தில் CEREX எரிவாயு கண்டறிதல் கருவியைப் பயன்படுத்தி காற்று தர கண்காணிப்பு நிறுவப்பட்டுள்ளது என சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டத்தோ வான் அப்துல் லாதிப் வான் ஜாபார் தெரிவித்தார். தற்போது வரை, காற்று தர கண்காணிப்பு நிலையம் மிதமான அளவில் உள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காற்று மாசுபாடு குறியீட்டு அளவீடுகளை கண்டறியவில்லை என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


தமது துறை, விமானம் வாயிலாகவும் ட்ரோன்களைப் பயன்படுத்தியும் தரை வழியாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அவ்வப்போது API அளவீடுகளைக் கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS