சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
நேற்று புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட சில வீடுகளில் இன்னும் சிறிய அளவிலான தீ இன்னும் எரிந்து கொண்டு இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க மலேசிய தீயணைப்பு – மீட்புத் துறை ஒரு தீயணைக்கும் இயந்திரத்தையும் ஆறு உறுப்பினர்களையும் கொண்டு கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், குறைவாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே தேவையான பொருட்களையும் முக்கியமான ஆவணங்களையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.