கோலாலம்பூர், ஏப்ரல்.03-
நாட்டில் மனோரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிக்கை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
எனினும் புற நகர் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களிலேயே இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுகாதார கவனிப்பு மீதான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.