எதிர் நடவடிக்கை எடுக்க மலேசியா விரும்பவில்லை

கோலாலம்பூர், ஏப்ரல்.03-

மலேசியாவிற்கு எதிராக 24 விழுக்காடு ஏற்றுமதி வரியை அமெரிக்கா விதித்த போதிலும் அதற்கு எதிராக எதிர் நடவடிக்கை எடுப்பதற்கு நாடு நோக்கம் கொண்டு இருக்கவில்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த 24 விழுக்காடு கூடுதல் வரி விதிப்பை மலேசியா கடுமையாகஒ கருதுவதாக அந்த அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் நடப்புப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளை மலேசியா ஆராயும் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS