ஜோகூர் பாரு, ஏப்ரல்.03-
எண்ணெய் நிலையத்தின் முன் நிகழ்ந்த விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்டதில் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்றிரவு 8.20 மணியளவில் ஜோகூர் பாரு, பண்டார் பெர்மாஸ் ஜெயாவில் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைவதற்குள், காயமுற்ற இருவரும், பொது மக்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பெர்மாஸ் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் முதிர் நிலை அதிகாரி எம்.கே ஹரிதாஸ் தெரிவித்தார்.
ஹோண்டா சிட்டி ரக கார் தீப்பற்றிக் கொண்டதில் 22 வயது ஆடவரும் 21 வயது பெண்ணும் காயமுற்றனர். அவ்விருவரும் EMRS வண்டியின் மூலம் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.