கோலாலம்பூர், ஏப்ரல்.03-
தலைக்கவசம் அணியாத சீன ஆடவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதாக அரச மலேசிய போலீஸ் படை மீது அவதூறான தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள முகமட் ஹாருன் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் படை, பாரபட்சமாகச் செயல்படுகிறது என்று அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக 233 ஆவது குற்றவியல் சட்டம் மற்றம் 1998 ஆம்ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக பஹாங், பெரா மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிப்ளி நாசீர் தெரிவித்தார்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு சீனர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றதாக அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.