பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.03-
முறைகேடு நடவடிக்கை தொடர்பில் கடந்த ஆண்டு சுங்கத் துறையைச் சேர்ந்த 54 அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அதன் தலைமை இயக்குநர் அனிஸ் ரிஸானா முகமட் ஸைனுடின் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 14, 872 சுங்கத்துறை அதிகாரிகளில் இந்த எண்ணிக்கை, 0.36 விழுக்காடாகும். இது மிகச் சிறிய எண்ணிக்கை என்றாலும் இதனைச் சுங்கத்துறை கடுமையாக கருதுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் இது போன்ற அதிகாரிகள் பிடிபடுவது மூலம் மலேசிய சுங்கத் துறையை மேம்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அனிஸ் ரிஸானா தெரிவித்தார்.