பரஸ்பர வரி விதிப்பைத் திணித்தார் அமெரிக்க அதிபர்

நியூயோர்க், ஏப்ரல்.03-

அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் “அனைத்து நாடுகள்” மீதும் பரஸ்பர வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

நேற்று ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூடுதல் வரி விதிப்பின் மூலம் அமெரிக்காவிற்கு ‘விடுதலை நாள்’ என்று அவர் வர்ணித்துள்ளார்.
ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கையினால் உலகளவில் வர்த்தகப் போர் ஏற்படும் என்றும், உலகளவில் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் பதற்றம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள இந்த பரஸ்பர வரிகளால் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரியை டிரம்ப் விதித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS