சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இன்று வியாழக்கிழமை காலை முதல் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படாது. மாறாக, கட்டம் கட்டமாகச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஹுஸுனுல் கைடில் முகமட் தெரிவித்தார்.
115 வீட்டு உரிமையாளர்களில் 41 குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முதலில் அனுமதிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் ஜாலான் 1/3A பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று காலை 9.30 மணி முதல் அவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வீடுகளின் மின்சாரக் கம்பிகளின் இணைப்பில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று உறுதிச் செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.