சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவசர தேவைகளுக்குப் பயன்படுத்தவதற்கு 30 கார்களைத் தற்காலிமாக வழங்குவதற்கு Carro கார் விற்பனை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மேலும் இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் தேவைப்படுமானால் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ங் ஸீ ஹான் அலுவலகத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த பதிவின் மூலம் உண்மையிலேயே எத்தனை மோட்டார் சைக்கிள்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இன்று மஸ்ஜிட் புத்ரா ஹைட்ஸ் நிவாரண மையத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.