சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் கூடுதல் உதவிகள் வழங்குவது குறித்து அரசாங்கம் விவாதிக்கவிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று கோத்தா ராஜா எம்.பி.யான முகமட் சாபு குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் ரொக்க உதவியும், சேதமுற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
சேதமுற்ற வீடுகள் சீர்படுத்திக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்த நிலையில், மேலும் எத்தகைய உதவிகள் வழங்குவது என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.