அலோர் ஸ்டார், ஏப்ரல்.03-
கெடா மாநிலத்தில் மூர்க்கமான நாய்கள் வளர்க்கப்படுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா இன்று கோடி காட்டியுள்ளார்.
நாய் பராமாரிப்பிற்கான வழிகாட்டல் முறையை கெடா மாநில அரசு வெளியிடவிருக்கிறது. இதில் மூர்க்கமான நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாலிங் அருகில் கோல கெட்டில், தாமான் டேசா பிடாரா வீடமைப்புப் பகுதியில் கூண்டிலிருந்து தப்பிய ரோட்வேலர் ரகத்தைச் சேர்ந்த இரண்டு நாய்கள், ஐவரைக் கடித்துக் குதறியது தொடர்பில் கருத்துரைக்கையில் மன்சோர் ஸாஜாரியா இதனைத் தெரிவித்தார்.
வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு மூர்க்கமான நாய்கள் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.