சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-
புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் காயமுற்றவர்களில் ஒருவர் மட்டுமே இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி கால்சோம் ஷம்சுடின் தெரிவித்தார்.
அம்பாங் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சைபர் ஜெயா மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த இதர மூன்று நோயாளிகள், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சைபர் ஜெயா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஷாஹாபுடின் இப்ராஹிம் கூறுகையில், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.