நியாயம் கேட்டு, போலீசாரின் உதவியை நாடிய ஆடவர்

கோலாலம்பூர், ஏப்ரல்.03-

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், மேடான் ஶ்ரீ கெராமாட்டில் உள்ள தனது தாயாரின் வீட்டின் முன்புறம், பத்து பேர் கொண்ட ஆடவர்களால் தாம் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டதாகக் கூறும் வர்த்தகர் ஒருவர், தமக்கு நியாயம் கிடைக்க போலீசார் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

38 வயது சையிட் அக்மால் சையிட் அஹ்மாட் என்ற அந்த வர்ததகர், தற்போது தனக்கும், தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முறையிட்டுள்ளார்.

தனது வர்த்தகத்தை முடித்து விட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு புறப்படுவதற்குத் தயாரான போது 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த பத்து பேர் , தன்னை கண்மூடித்தனமாகத் தாக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று அந்த வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS