சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-
புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கடந்த மார்ச் மாதம் 100 விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
தீச் சம்பவத்தினால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களின் சிரமங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த 100 விழுக்காடு மின்சாரக் கட்டணக் கழிவு வழங்கப்படுவதாக டிஎன்பி தெரிவித்துள்ளது.
தனக்குள்ள சமூகக் கடப்பாட்டை நிறைவேற்றும் வகையில் இந்த 100 விழுக்காட்டு கட்டண கழிவு, வரும் ஏப்ரல் மாத பில்லில் வரவு வைக்கப்படும் என்று, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டிஎன்பி குறிப்பிட்டுள்ளது.