சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-
புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை அறிக்கையின் முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் இதனை அறிவிப்பார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பிற்கு அலட்சிம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய இதர காரணங்கள் இருக்கக்கூடுமா? என்பதைக் கண்டறியும் வகையில் பூர்வாங்க விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடக்கக் கட்ட விசாரணை முடிவுகளை சிலாங்கூர் போலீஸ தலைவர் நாளை அறிவிப்பார் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.