ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.04-
உள்ளூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் 22 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், காட் லெபோ மகால்லும் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
அந்த வீடமைப்புப் பகுதியில் 27 வயது இளைஞர் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து போலீசார் அவ்விடத்திற்கு விரைந்ததாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிடென்டன் லீ சுவீ சாகே தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இளைஞர், அந்த வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் இறப்பை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக லீ குறிப்பிட்டார்.
இதனிடைய துயரத்தில் உள்ள அந்த இளைஞரின் குடும்பத்தினரின் உணர்வுக்கு மதிப்புளிக்கும் வகையில் இளைஞர் சம்பந்தப்பட்ட காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.