சுபாங் ஜெயா, ஏப்ரல்.04-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய இடத்தில் 10 மீட்டர் ஆழத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பத்து மீட்டர் ஆழத்திலும் 21 மீட்டர் முதல் 24 மீட்டர் அகலத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளம் அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார். அந்தப் பள்ளத்தின் நடப்பு நிலை குறித்து தீயணைப்பு, மீட்புப்படையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பள்ளத்தினால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.