ஷா ஆலாம், ஏப்ரல்.04-
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுஃடின் இட்ரிஸ் ஷா வழங்கி, கெளரவித்ததாகக் கூறி, டத்தோஸ்ரீ விருதைத், தனது பெயருக்கு முன்னாள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வரும் நபர் ஒருவர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனது முகநுலில் அந்த நபர், தனது பெயருக்கு முன்னாள் டத்தோஸ்ரீ அந்தஸ்தைப் பயன்படுத்தியுள்ளார். அந்த உயரிய விருது சிலாங்கூர் சுல்தானால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தாங்கள் ஆராய்ந்ததில் சிலாங்கூர் அரண்மனை, அந்த நபருக்கு எந்தவோர் உயரிய விருதையும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக டத்தோ ஹுசேன் ஓமார் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் அரண்மனையில் வழங்கப்படாத ஓர் உயரிய விருதைத் தங்கள் பெயர் முன்னாள் இணைத்துக் கொள்வது பெரும் குற்றமாகும். முகநூலில் தனது பெயருக்கு முன்னாள் டத்தோஸ்ரீ அந்தஸ்தை பயன்படுத்தியுள்ள அந்த நபர் போலீசாரின் விசாரணைக்கு உதவ வேண்டும் என்று டத்தோ ஹுசேன் ஓமார் கேட்டுக் கொண்டார்.