ஈப்போ, ஏப்ரல்.04-
பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் இடைத் தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர் பெயர், வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு ஆயர் கூனிங்கில் பிஎஸ்எம் கட்சியின் தேர்தல் நடவடிக்கை அறையில் ஏற்பாடு செய்யப்படும் செய்தியாளர்கள் கூட்டத்தில் வேட்பாளரின் பெயரைத் தாமே அறிவிக்கவிருப்பதாக டாக்டர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலைப் போல தேர்தல் நடவடிக்கை அறையை முழுத் துடிப்பாகத் தங்கள் தேர்தல் நடவடிக்கை அறையை முன்னெடுக்கவில்லை என்றாலும் தேர்தல் நடவடிக்கை அறையின் பணிகளைத் தாங்கள் தொடங்கிவிட்டதாக டாக்டர் ஜெயகுமார் தெரிவித்தார்.