காஜாங், ஏப்ரல்.04-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் காலம் மேலும் ஒரு தவணைக்கு நீட்டிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
அஸாம் பாக்கியின் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அதே வேளையில் அஸாம் பாக்கியின் பதவிக் காலத்திற்கான ஒப்பந்தம் மேலும் 6 மாதம் காலம் நீடிக்கப்படலாம் என்று புளும்பெர்க் வெளியிட்ட செய்தியை டத்தோஸ்ரீ அன்வார் மறுத்துள்ளார்.