நெக்லஸைத் திருடியதாக மாது கைது

தாவாவ், ஏப்ரல்.04-

ஹரிராயா விடுமுறையில் தங்கள் வீட்டிற்கு வந்த வருகையாளர்கள், நெக்லஸைத் திருடிச் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து 26 வயது பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் சபா, தாவாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்தவர்கள், வீட்டிலிருந்து வெளியேறி பின்னர் தங்க ஆபரணத்தைக் காணவில்லை எனத் தனது மனைவி தெரிவித்ததாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்தார்.

அவர்களின் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விருந்தாளிகள் அடையாளம் காணப்பட்டு விசாரணை செய்த போது 26 வயது பெண் கைது செய்யப்பட்டதாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சம்பின் பியூ தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS