கோலாலம்பூர், ஏப்ரல்.04-
ஹரிராயா பெருநாளை கொண்டாடுவதற்காக நீண்ட விடுமுறையில் தங்கள் கிராமங்களுக்குச் சென்றவர்கள் பலர், இன்று வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு, மூன்று நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகமான வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளில் காணப்படுகின்றன.
வரும் திங்கட்கிழமை பள்ளி தொடங்கிவிருக்கும் இவ்வேளையில் அதிகமானோர், கோலாலமபூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பிற பகுதிகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அதிகமான வாகனங்கள் காணப்படுவதுடன் அவை மெதுவாக நகர்கின்றன என்று பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.