கோலாலம்பூர், ஏப்ரல்.04-
கோலாலம்பூர், தாமான் செராஸ், ஜாலான் செங்கேக் என்ற இடத்தில் ஆடவர் ஒருவரைக் கடத்துவதற்கு முயற்சி செய்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு, அவர்களின் வாகனத்தின் டயர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அந்த மூவரும் பிடிக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.
கடத்தல்காரர்களைப் பிடிப்பதில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த கும்பலின் வாகனத்தைப் போலீசார் துரத்திய போது, இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.