ஹரிராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது பெட்ரோனாஸ்

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

ஹரிராயா பொது உபசரிப்பைப் பெரியளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்த நாட்டின் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், அந்த பொது உபசரிப்பை ரத்து செய்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஹரிராயா பொது உபசரிப்பை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பெட்ரோனாஸ் நிறுவனம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதால் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி சரவாக், கூச்சிங்கில் பெரிய அளவில் நடைபெறவிருந்த பொது உபரிப்பு ரத்து செய்யப்படுவதாக அது அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS