பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் பங்களா வீடுகள்

சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-

நிலத்தடி எரிவாய் குழாய் வெடி விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட புத்ரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள பல லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பங்களா வீடுகள், பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

புத்ரா ஹைட்ஸில் உள்ள ஒரு பங்களா வீடு ஒன்று, பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த பங்களா வீடு, வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 62 லட்சம் வெள்ளிக்கு விலை மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த வீடு பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த ஆடம்பர வீடு ஏலம் விடப்பட்டதில் 33 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS