கோலாலம்பூர், ஏப்ரல்.05-
மலேசிய அரசியலில் கடந்த 30 ஆண்டுகால அனுபவத்தை கொண்ட பிகேஆர் கட்சி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒரு நடுநிலையான நாட்டை உருவாக்குவதோடு, ஒரு சிறந்த தேசத்தை கட்டமைக்கும் தனது லட்சியத் தடத்திலிருந்து விலகாது என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.
26 ஆண்டுகளுக் முன்பு, கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பிகேஆர் கட்சி அதிகாரப்பூர்மாகத் தொடங்கப்பட்டது.
நாட்டில் ஊழல், லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிராகத் தனது போராட்டத்தை முன்னிறுத்தி ரெபோஃமார்சி, என்ற முழக்கத்துடனும், முகத்துடனும் பிகேஆர் கட்சி மக்களைச் சந்தித்தது.
நாட்டில் பல்வேறு மாற்றங்களையும், சமூக நீதியையும், சிறந்த நல்லாட்சியையும் கொண்டு வருவதே பிகேஆரின் லட்சியமாகும். வீதியிலிருந்து வாக்களிப்பு மையங்கள் வரை மேற்கொள்ளப்பட்ட நீதி போராட்டத்தின் விளைவாகவே பிற கட்சிகளுடன் இணைந்து மடானி அரசாங்கத்தை நிறுவுவதற்கு வாய்ப்பு அதற்குக் கிட்டியது என்று பாஃமி குறிப்பிட்டார்.