நாட்டின் தலைமை நீதிபதியாக அபாங் இஸ்கண்டார் நியமிக்கப்படலாம்

கோலாலம்பூர், ஏப்ரல்.05-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக அப்பீல் நீதிமன்றத்தின் தலைவர் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து வரும் ஜுன் மாதம் பணி ஓய்வு பெறவிருக்கும் தெங்கு மைமூன் துவான் மாட்டிற்கு பதிலாக அபாங் இஸ்கண்டார் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

நீதி பரிபாலனத்துறையின் உச்சப் பதவியை சரவா மாநிலத்தைச் சேர்ந்த யாரும், இதுவரையில் வகிக்காத நிலையில் அப்பதவிக்கு அபாங் இஸ்கண்டார் நியமிக்கப்படுவது வியூகம் நிறைந்தது என்று கூறப்படுகிறது.

சரவாக், சிபுவில் பிறந்த வளர்ந்தவரான 65 வயது அபாங் இஸ்கண்டார், அப்பீல் நீதிமன்றத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, சபா, சரவாக் தலைமை நீதிபதியாகச் சேவையாற்றிவர் ஆவார்.

நாட்டின் தலைமை நீதிபதியாக அபாங் இஸ்கண்டார் நியமிக்கப்படுவது மூலம் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

WATCH OUR LATEST NEWS