சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-
கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடி விபத்து நடந்த புத்ரா ஹைட்ஸ் பகுதியை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று காலையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
காலை 9.50 மணிக்கு வருகை தந்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, சிலாங்கூர் ராஜா மூடா, தெங்கு அமீர் ஷா மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அடைக்கலம் புகுந்துள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து மாமன்னர் ஆறுதல் கூறியதுடன், நன்கொடையையும், உதவிப் பொருட்களையும் வழங்கினார்.
அதற்கு முன்னதாக எரிவாயு குழாய் வெடி விபத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் அரசு அளிக்கவிருக்கும் நிவாரணம் குறித்து மாமன்னருக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி விளக்கம் அளித்தார்.