ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.05-
பினாங்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், தனது தொகுதியில் உள்ள சேவை மையத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் B40 குழுவினருக்கு மூக்குக் கண்ணாடி அணிவதற்கான திட்டத்தை இன்று ஏப்ரல் 5 ஆம் தேதி சனிக்கிழமை வெற்றிகரமான செயல்படுத்தினார்.
பார்வை ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாக விளங்குதால் பார்வை குறைபாடு கொண்ட மாணவர்களுக்கும், தொகுதியில் உள்ள B40 தரப்பினருக்கும் இந்த சமூகத் திட்டத்தை முன்னெடுப்பதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்று முறையில் தாம் மகிழ்ச்சி அடைவதாக குமரன் கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவு மற்றும் பரிசோதனைக்கு பிறகு மொத்தம் 45 பேர், இலவசமாக மூக்குக் கண்ணாடி பெற்றுக் கொள்வதற்கான தலா 190 ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் பார்வை குறைபாடு கொண்ட மாணவர்கள், தங்களின் கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்திக் கொள்ள பெரிதும் உதவும் அதே வேளையில் பெரியவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குமரன் கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார்.
மூக்குக் கண்ணாடிக்கான வவுச்சர்கள பெற்றுக் கொண்டவர்களில் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சி, அவர்களுக்கு சேவையாற்றும் ஒரு வாய்ப்பாக, இதனைத் தாம் கருதுவதாக குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
எந்தவொரு குடிமகனும் தகுந்த உதவியைப் பெறுவதில் இருந்து விடுபடக்கூடாது என்பதை உறுதிச் செய்வதற்கான தங்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியே, இந்த உதவித் திட்டமாகும்.
பாகான் டாலாம் தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில், தொகுதிச் சேவை மையத்தின், மக்கள் சேவைப் பணிகள், தொடரும் என்று குமரன் கிருஷ்ணன் உறுதி கூறினார்.