ஆயர் குரோ, ஏப்ரல்.05-
மடானி ஹரிராயா பொது உபசரிப்பு, இன்று மலாக்கா, ஆயர் குரோவில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மலேசியாவின் பன்முகக் கலாச்சார நல்லிணக்கத்தின் உண்மையான பிரதிபலிப்பாக நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார்.
பன்முகத்தன்மையிலான உற்சாகம் மிகுந்த இந்த பொது உபசரிப்பில் மலாக்கா மாநில வாசிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலிருந்தும் மக்கள் பெருவாரியாக வருகை தந்து நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்தனர்.
ஆயர் குரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் மக்கள் காலை 9 மணிக்கே குழுமத் தொடங்கி விட்டனர்.