ஆயர் குரோ, ஏப்ரல்.05-
2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டின் உபசரணை மாநிலமாக மலாக்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை மலாக்கா மாநில அரசாங்கம் முழுமையாக வரவேற்பதாக மலாக்கா முதலமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ராவுப்ஃ யூசோ தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டைச் சிறக்க வைப்பதற்கு எத்தகைய நடவடிக்கையை மலாக்கா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது குறித்து சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சு, மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கம் அளவில் இருக்கக்கூடிய அதன் தொடர்புடைய ஏஜென்சிகளுடன் மாநில அரசாங்கம் கலந்து ஆலோசிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.