புத்ராஜெயா, ஏப்ரல்.05-
எரிவாயு குழாய் வெடி விபத்தில் காயமுற்றவர்களில் 24 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர், அம்பாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் எஞ்சியர்கள் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
65 வயதுடைய நபர் மட்டும் , இன்னமும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருந்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.