சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிவாரண நிதி வழங்கப்பட்டதுடன் அவர்கள் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்குக் கார்கள் வழங்கப்பட்டன.
Berjaya Corporation Berhad நிறுவனம், 300 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கியது. Matrix Concepts Holdings Berhad நிறுவனம் 100 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட்டை வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இரண்டு நிறுவனங்கள் வழங்கிய இந்த நிதி உதவி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமங்களை ஓரளவு குறைக்கும் என்று தாம் நம்புவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.