கோல நெராங், ஏப்ரல்.06-
கெடா மாநிலத்தின் கோல நெராங் அருகே உள்ள கம்போங் பொகொக் மாச்சாங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில், அதில் சிக்கிய 3 குழந்தைகள் பத்து பேர் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோல நெராங் தீயணைப்பு – மீட்பு நிலையத்தின் தலைவர், அமினுடின் மாட் கோஸாலி கூறுகையில், இன்று அதிகாலை 2.24 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாக செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்ததும், கனமழை காரணமாக திடீர் வெள்ளத்தில் 10 பேர் சிக்கித் தவித்தது தெரியவந்தது. அவர்களில் ஆறு பேர் பெண்கள், மூன்று சிறுவர்கள், ஓர் ஆண் குழந்தை ஆவர். வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை காலை 4.31 மணிக்கு முடிவடைந்தது என்று அமினுடின் கூறினார்.