ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.06-
பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் பாஃட்லீனா சீடெக், அக்கட்சியின் பினாங்கு, நிபோங் திபால் கிளைத் தலைவர் பதவிக்கு போட்டியிட முன் வந்துள்ளார். கிளை, மகளிர் – இளைஞர் பிரிவுக்கானத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கட்சி உறுப்பினர்கள், நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்கள், நிபோங் திபால் மக்கள் ஆகியோர் தமக்கு நாடாளுமன்றம் செல்ல உதவிய கடின உழைப்புக்கு நன்றிக் கடனாகவே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.