சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-
நேற்றிரவு பெய்த கனமழையால் புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் காவல் துறையுடன் பிற அமைப்புகளும் இன்று கவனம் செலுத்துகின்றன. இதனால், ஆறாவது நாளான இன்று மதிப்பீட்டுப் பணிகளைத் தொடரவும், குடியிருப்பாளர்களை உள்ளே அனுமதிக்கவும் பள்ளத்தில் விசாரணைப் பணிகளைத் தொடரவும் முடியும். தீ விபத்து பள்ளத்தில் இன்னும் அதிக நீர் இருப்பதால், அதனை வெளியேற்றிய பின்னரே வழக்கமான மதிப்பீட்டுப் பணிகளைத் தொடங்க முடியும் என்று சுபாங் ஜெயா காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
இதனிடையே, புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு ஏற்பட்ட பள்ளத்தின் பாதுகாப்பு குறித்த இறுதி மதிப்பீட்டுப் பணிகள் இன்று நிறைவடையும் என்று தீயணைப்பு- மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார். பின்னர் இது சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு விரைவில் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.