கோலாலம்பூர், ஏப்ரல்.06-
இன்று காலை அரண்மனையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம்மை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நேரமாக இருந்தாலும், இஸ்தானா நெகாராவில் உள்ள தனது அலுவலகத்தில் பேரரசர் அதிகாரப்பூர்வப் பணிகளை மேற்கொண்டதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காலை 7 மணி முதலே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்கு முன்பு, மன்னர் அரண்மனையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.