இந்திய சினிமாவில் தலைசிறந்த பல பின்னணி பாடகர்கள் உள்ளனர். இதில் பல முன்னணி பாடகர்கள் ஒரு பாடலைப் பாட ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
ஆனால், ஒரு பாடலை பாடுவதற்காக ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் பாடகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஏ.ஆர். ரஹ்மான்தான்.
ஆம், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசைப் புயலாக வந்த ஏ.ஆர். ரஹ்மான் தான், ஒரு பாடலைப் பாட ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர் ஒரு திரைப்படத்திற்கு முழுமையாக இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது.